சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பம்
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.
மத அனுஷ்டனங்களுக்கு அமைய பெல்மடுல்லை - கல்பொத்தாவ ரஜமஹா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமன்தேவ உருவச்சிலை மற்றும் தேவ ஆபரணங்களை சிவனொளிபாத மலைக்கு கொண்டு செல்லும் ஊர்வலம் நேற்று ஆரம்பமானது.
இந்தநிலையில் சமன்தேவ உருவச்சிலை மற்றும் தேவ ஆபரணங்கள் சிவனொளிபாத மலையில் பிரதிஷ்டைசெய்யப்படவுள்ளது.
இதேவேளை, கொவிட் 19 பரவலக்கு மத்தியில் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைய மேற்கொள்ள வேண்டாம் என நுவரெலிய மாவட்ட கொவிட் 19 தடுப்பு குழு, பொது மக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.