நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை வேளைகளில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.