சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை..!

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை..!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகரசபையின் முதல்வர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகாரசபைக்குட்பட்ட பகுதியில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

கொரனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவது மற்றும் அந்த பகுதிகளில் இருந்து வரும் மக்களை கட்டுபடுத்துவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.