டிப்பரை முந்திச் செல்ல முற்பட்டவேளை ஏற்பட்ட அனர்த்தம் - ஸ்தலத்திற்கு பொலிஸார் விரைவு

டிப்பரை முந்திச் செல்ல முற்பட்டவேளை ஏற்பட்ட அனர்த்தம் - ஸ்தலத்திற்கு பொலிஸார் விரைவு

டிப்பரை முந்தி செல்லமுற்பட்ட மோட்டார் சைக்கிள் டிப்பர் வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொட்டகலையில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் முன்னால் சென்ற டிப்பர் வண்டியினை முந்தி கொண்டு செல்லமுற்பட்ட வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் டிப்பர் வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் ஹட்டன் மல்லியப்பு பகுதியில்  புதன்கிழமை மாலை 5.30மணியளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

குறித்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரின் தந்தையார் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.