கோர விபத்தில் ஒருவர் பலி! அறுவர் படுகாயம்
கலகெதர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகன சாரதி கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.
பார ஊர்தி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நான்கு வாகனங்களுடன் மோதியபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்தநிலையில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரஊர்தி சாரதியின் தவறான இயக்கமே விபத்துக்கான காரணம் என்று காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கனரக வாகனங்களின் சாரதிகள் தமது வாகனங்களை வீதிகளுக்கு செலுத்துவதற்கு முன்னர் அவற்றை பரிசோதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.