உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன...!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன...!

எஹலியகொட பிரதேச செயலகப் பிாிவின் மின்னான, விலேகொட, யக்குதாகொட, அஸ்ககுல-வடக்கு, போபத்த ஆகிய கிராம சேவகர் பிாிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

இதேபோல் கொடகவெல பிரதேச செயலகப் பிாிவின் ரக்வான நகரம், ரக்வான- வடக்கு, ரக்வான - தெற்கு, மஸ்ஸிபுல, கொட்டல ஆகிய கிராம சேவகர் பிாிவுகளும் உனடடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தொிவித்துள்ளார்