உப்பு உற்பத்தி நிறுவனத்திற்கு ஒரு வருட காலம் அவகாசம்- ஜனாதிபதி (படங்கள்)

உப்பு உற்பத்தி நிறுவனத்திற்கு ஒரு வருட காலம் அவகாசம்- ஜனாதிபதி (படங்கள்)

2018ஆம் வருடம் தொடக்கம் நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை உப்பு (தனியார்) நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவதற்காக ஒருவருட காலம் அவகாசம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

குறித்த நிறுவனத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.