நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழை...!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழை...!

வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை நிலவரம் அறிக்கையில் இந்த விடயம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.