வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 539 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 539 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 8 விமானப் பயணங்களை மேற்கொண்டு இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
மேற்படி வருகை தந்தவர்களில் 201 பேர் ஜோர்தானிலிருந்தும், 74 பேர் ஜப்பானிலிருந்தும் 65 பேர் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திலிருந்தும் 62 பேர் அவுஸ்திரேலியாவிலிருந்தும் வருகை தந்துள்ளனர்.
அவ்வாறே மேலும் 215 இலங்கையர்கள் நேற்று நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.