வீட்டிலிருந்து தப்பியோடிய தொற்றுக்குள்ளான நபர் கண்டுபிடிக்கப்பட்டார்!

வீட்டிலிருந்து தப்பியோடிய தொற்றுக்குள்ளான நபர் கண்டுபிடிக்கப்பட்டார்!

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின் வீட்டிலிருந்து தப்பியோடிய நிமேஷ் மதுசங்க எனும் 22 வயதுடைய இளைஞன் அப்பிரதேசத்திலேயே ஒரு வீட்டினுள் இருந்த போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொவிட்-19 தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பாிசோதனைகளின் முடிவுகள் பெறப்படும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக காவல் துறை தொிவித்துள்ளது.

எவ்வாறெனினும் இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பே இவர் வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்.