ஐரோப்பாவில் மட்டுமல்ல - இலங்கைக்கும் ஆபத்து! மருத்துவர் சுதத் சமரவீர எச்சரிக்கை
இலங்கையிலும் வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் என்பதால் நாட்டில் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவருவது மிக முக்கியமானது என தலைமை தொற்று நோயியல் நிபுணர், மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் ஐரோப்பாவில் மட்டுமல்ல இலங்கையிலும் உருமாறக்கூடும் என அவர் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,
இது கொவிட்-19 வைரஸின் இயல்பு. இதனால் தான் விரைவில் வைரஸிலிருந்து விடுபடுவது மிக முக்கியமானது.
ஒருவர் புதிய கொவிட்-19 பிறழ்வுக்கு ஆளானாரா என்பதை அடையாளம் காண்பது கடினம். ஏனெனில் பெரும்பாலான கொவிட்-19 நோயாளர்கள் அறிகுறியற்றவர்கள்.
ஒரு சாதாரண பிசிஆர் சோதனையால் வைரஸின் விகாரத்தை வேறுபடுத்த முடியாது.
மரபணுக்கூறுகளை ஆய்வு செய்வதிலிருந்து மட்டுமே இதனை அடையாளம் காண முடியும்.
ஒக்டோபர் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொவிட்-19 வைரஸின் இரண்டாவது அலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்களின் உதவி வழங்கப்பட்டால் கொவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதில் ஒரு சிறந்த பணியை நாங்கள் செய்ய முடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.