புதிய ஆண்டில் அதிகரிக்கவுள்ள விலை- வெளிவந்த அறிவிப்பு

புதிய ஆண்டில் அதிகரிக்கவுள்ள விலை- வெளிவந்த அறிவிப்பு

வெதுப்பக உணவு உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகரித்ததை அடுத்து அடுத்த வருட தொடக்கத்தில் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இதனை கூறியுள்ளார்.

வெதுப்பக உணவு உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் எனவும்

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வெண்ணெய்க்கு அறவிடப்பட்டு வந்த 200 ரூபாய் வரி 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இதற்காக வழங்கப்பட்ட நிவாரண காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால், வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிப்பை புதிய ஆண்டில் எதிர்பார்க்க முடியும் எனவும் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.