எட்டு மாதங்களில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு- வெளிவந்தது அறிக்கை

எட்டு மாதங்களில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு- வெளிவந்தது அறிக்கை

நிதியமைச்சர் வெளியிட்டுள்ள ‘நிதி மேலாண்மை அறிக்கை 2020–21’ படி, அரசாங்கத்துக்கு சொந்தமான 52 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் 2020 முதல் 8 மாதங்களில் மில்லியன் கணக்கில் நட்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி,அரசுக்கு சொந்தமான 52 நிறுவனங்களிலிருந்து மொத்தம் ரூபா 10,447 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ், இலங்கை போக்குவரத்துச் சபை, லங்கா சதொச, அரச பொறியியல் கூட்டுததாபனம், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சிகளான ரூபாவாஹினி மற்றும் ஐ.டி.என் ஆகியவை பெரும் இழப்பை சந்தித்த நிறுவனங்களின் பட்டியலில் அடங்கும்.

அதேபோன்று ஊழியர்களின் நம்பிக்கை நிதியம், இலங்கை வங்கி, இலங்கை துறைமுக அதிகார சபை, லொத்தர் சபை, தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியம், அரச மருந்தாக்கல் கூட்டத்தாபனம் மற்றும் சீனித் தொழிற்சாலை ஆகிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் இழப்பை சந்தித்தவையில் அடங்கும்.