வாகனங்களை செலுத்துபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

வாகனங்களை செலுத்துபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்கள் செலுத்துவோரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியரும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் வாகனத்தை வழங்குவதாகவும் குறைந்த வயதில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சிலரை ஏற்கனவே கைது செய்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறானவர்கள் கைது செய்யப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரிடம் வாகனத்தை வழங்குவதும் சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சிவில் உடையணிந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் இதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.