தொற்றுக்குள்ளான 639 சிறைக்கைதிகள் சிகிச்சை மத்திய நிலையங்களில்..!

தொற்றுக்குள்ளான 639 சிறைக்கைதிகள் சிகிச்சை மத்திய நிலையங்களில்..!

சிறைச்சாலைகளோடு தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களில் இதுவரை 639 சிறைக் கைதிகள் சிகிச்சை மத்திய நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தொிவித்துள்ளது.

இதில் 9 உத்தியோகத்தர்கள் உள்ளடங்குவதோடு சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3615 ஆகும்.

இதுவரை சிறைக்கைதிகள் 2850 பேரும் உத்தியோகத்தர்கள் 112 பேரும் குணமடைந்துள்ளதோடு ஐவர் தொற்றுக்குள்ளாகி உயிாிழந்துள்ளனர்.

இன்று சிறைச்சாலையுடன் தொடர்புடைய நால்வர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.