மழையுடனான வானிலை அதிகரிக்கக் கூடும் - வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

மழையுடனான வானிலை அதிகரிக்கக் கூடும் - வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றிரவு முதல் அதிகரிக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.