வெளிநாடுகளிலிருந்து 248 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளிலிருந்து 248 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

இன்று (26) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 248 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். 

9 விமானங்களில் இவர்கள் வருகை தந்துள்ளதாகவும், இதில் கட்டார் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்தோரும் உள்ளடங்கப்படுவதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மேலும் 343 பேர் நாட்டிலிருந்து வெளியேறியிருப்பதோடு 130 பேர் ஜப்பான் நோக்கிப் பயணமாகியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.