பண்டிகைக் காலங்களில் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கோாிக்கை!

பண்டிகைக் காலங்களில் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கோாிக்கை!

வார இறுதி நாட்களில் வாகனங்களை செலுத்துகின்றவர்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

பண்டிகைக்காலம் என்பதால் அவதானம் இன்றி வாகனங்களை செலுத்தி விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் மாத்திரம் நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 6 பேர் மரணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.