விவசாய கழிவுகள் தொடர்பான விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை
கொத்தமல்லி என்ற போர்வையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட விவசாய கழிவுகள் தொடர்பான விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இதற்கு முன்னர் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டு மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட மருத்துவ கழிவுகள் தொடர்பில் விசாரணைகள் விரிவுபடுத்தப்படுவதாக சுங்கப்பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.
கொவிட்-19 பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் மருத்துவ கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி தண்டனை பெற்று தர முடியாமல் போனது.
இதற்கமைய மிக விரைவாக விசாரணைகளை ஆரம்பித்து மருத்துவ கழிவுகள் மற்றும் விவசாய கழிவுகளை இறக்குமதி செய்தவர்களுக்க எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யுக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில் 28 விவசாய கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டன.
இதற்கு முன்னர் மருத்துவ கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டதோடு அவற்றில் அதிகமானவை தற்போது மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.