இன்றைய தினத்தில் மாத்திரம் 551 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

இன்றைய தினத்தில் மாத்திரம் 551 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 551 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 339 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் 8 ஆயிரத்து 258 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.