கொரோனாவை ஒழிக்கும் ஒளடதத்தை பெற ஒன்று கூடிய மக்கள்..!

கொரோனாவை ஒழிக்கும் ஒளடதத்தை பெற ஒன்று கூடிய மக்கள்..!

கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் குணமடைவதாக கூறி ஒளடத பானி ஒன்றை தயாரித்த கேகாலை தம்மிக பண்டாரவின் ஒளடத உற்பத்தி நிலையம் உள்ள இடத்தில் இன்றும் பலர் ஒன்று கூடியுள்ளனர்.

ஒளடதம் விநியோகிகப்பட மாட்டாது என தம்மிக்க பண்டார அறிவித்துள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மக்கள் அங்கு ஒன்று கூடியுள்ளனர்.

கூடியிருந்தவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி மக்கள் தொடர்ந்தும் ஒன்று கூடியிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தம்மிக பண்டாரவால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள குறித்த ஒளடதம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை குணப்படுத்துவதாக ஆய்வு ரீதியாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே அந்த ஒளடத்தை பெற்றுக்கொள்ள ஒன்று கூட வேண்டாம் என சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி இவ்வாறு மக்கள் ஒன்று கூடுவதால் கொவிட் 19 பரவல் தொடர்ந்து பரவக்கூடிய அவதானம் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.