நத்தார் பண்டிகையினை வீடுகளில் கொண்டாடிய கிறிஸ்த்தவ மக்கள்..!
கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் நத்தார் பண்டிகையினை கிறிஸ்தவ மக்கள் தமது வீடுகளில் கொண்டாடி வருகின்றனர்.
நத்தார் விழாக்கள், அலங்காரங்கள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகள் போன்ற வழமையான ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்த முறை கிறிஸ்தவ மக்கள் முயற்சிக்கவில்லை என எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவானோர் தேவாலயங்களில் இடம்பெற்ற ஆராதனைகளில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி நாட்டின் பிரதான நத்தார் ஆராதனை, கந்தானை புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கார்டினர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கொரோனா பரவலுக்கு மத்தியில் வேறுபாடுகளை கலைந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தற்போதைய சவாலுக்கு முகக்கொடுக்க வேண்டும் என ஆராதனையின் போது பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன.
நத்தார் விசேட திருப்பலி யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினால் நத்தார் விசேட திருப்பலி யாழப்பாண மரியண்ணை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தற்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்கு பற்றுதலோடு திருப்பலி சிறப்பாக இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மலையகத்தில் வாழும் கிறிஸ்த்தவ மக்களும் சுகாதார முறையினை கடைபிடித்து நத்தார் நத்தார் பண்டிகையினை கெண்டாடி வருகின்றனர்.
அத்துடன் மலையக பகுதிகளில் உள்ள கிரிஸ்த்தவ தேவாலயங்களில் மக்கள், சமுக இடைவெளியினை பேணி முககவசம் அணிந்து வழிபாடுகளில் ஈடுபட்டதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் நத்தார் விசேட ஆராதனை திருப்பலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள அனைத்தது தேவாலயங்களிலும் நள்ளிரவு இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழமையான தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா தலைமையில் பங்குத்தந்தை சி.வி.அன்னதாஸ் ஆகியோரால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதேவேளை, பூரண பாதுகாப்புக்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு ஆலயங்களில் நத்தார் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட மக்களோடு 3 கட்டங்களாக விசேட திருப்பலிகள் இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவு செல்வபும் புனித யூதா ததேயூ ஆலயத்தில் அருட்த்தந்தை சோபன் மோகனதாஸ் அடிகளாரின்; நத்தார் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆலயத்துக்கு வருகை தந்தவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டிருந்தாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.