சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா - 2000 பேரை அண்மிக்கிறது கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா - 2000 பேரை அண்மிக்கிறது கொரோனா..!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1998 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 7 பேரும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது