122 ஆம் இலக்க பேருந்து சேவை பயணிகளுக்கான விசேட அறிவிப்பு..!
கொழும்பு முதல் அவிசாவளை வரையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்து சேவைகளையும் களுஹக்கல வரையில் மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அவிசாவளை மற்றும் கொஸ்கம காவல் துறை அதிகாரங்களுக்குட்பட்ட பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு முதல் அவலிசாவளை வரை சேவையில் ஈடுபடும் 122 ஆம் இலக்க பயணிகள் பேருந்து சேவை மற்றும் பழைய வீதியில் இடம்பெறும் போக்குவரத்து சேவைகள் ஆகியன களுஹக்கலையுடன் மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.