எங்கள் உள்நாட்டு விவகாரம்... தேவையின்றி குறுக்கீடு வேண்டாம்: கடுமையாக எச்சரித்த சீனா

எங்கள் உள்நாட்டு விவகாரம்... தேவையின்றி குறுக்கீடு வேண்டாம்: கடுமையாக எச்சரித்த சீனா

ஹொங்ஹொங்குக்கான புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பிரித்தானியாவின் எதிர்ப்பு கண்மூடித்தனமானது மட்டுமின்றி உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு ஒப்பானதாகும் என சீனா கடுமையாக எச்சரித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் பிரித்தானியாவின் இந்த கருத்துக்கு எதிராக இன்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரித்தானியாவின் இந்த போக்கு கண்டிப்பாக பின்னடைவை சந்திக்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஹொங்ஹொங்கின் மனித உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபடும் என்றால், அங்குள்ள 3 மில்லியன் மக்களுக்கு குடியுரிமை வழங்கவும் பிரித்தானியா தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்ததை அடுத்தே சீனா வெளிவிவகார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.