இரத்தினபுரியில் கொரோனாவால் பறிபோன முதல் உயிர்!
இரத்தினபுரி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் நேற்றிரவு (23) பதிவாகியுள்ளது.
எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சமந்தா ராமசந்திர இதை குறிப்பிட்டுள்ளார்.
இதில் இரத்தினபுரி – பொம்பகெலே பகுதியைச் சேர்ந்த வீ.எம்.கிருஸ்னன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
50 வயதான குறித்த நபர், முச்சக்கரவண்டி சாரதி என தெரிவிக்கப்படுகின்றது.
நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களுடன் கொவிட் தொற்று ஏற்பட்டமையே, உயிரிழப்புக்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாது, உடவலவ பகுதியிலுள்ள தகனம் செய்யப்படும். குறித்த இடத்தில் இறுதிக் கிரியைகளை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.