முடக்கத்திலிருந்து விடுவிக்குமாறு கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி மக்கள் கோரிக்கை

முடக்கத்திலிருந்து விடுவிக்குமாறு கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி மக்கள் கோரிக்கை

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகள் சுமார் 2 மாதங்களாக முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு – கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி, பெரடைஸ் பார்க் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் முடக்க நிலை காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் அதிகளவில் கூலித்தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவர்களும் சலவைத் தொழிலாளர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அரசாங்கத்தினால் 5000 ரூபா நிதி உதவி வழங்கப்பட்ட போதிலும், தங்களுக்கு அந்தத் தொகை போதாது என மக்கள் குறிப்பிட்டனர்.

தங்களின் பிரதேசங்களிலுள்ள முடக்க நிலையை அகற்றினால் தாங்கள் தொழில் செய்து வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும் என மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.