மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவை..!

மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவை..!

அவிசாவளை மற்றும் கொஸ்கம ஆகிய காவல் துறை அதிகாரங்களுக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதையடுத்து களனிவெலி வீதியினூடான புகையிரத சேவை, கொழும்பு முதல் வக புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை முதல் கட்டுகொட, கொஸ்கம, புவக்பிட்டி. மற்றும் அவிசாவளை ஆகிய புகையிரத நிலையங்களில் மீள் அறிவிப்பு வரை பயணிகளுக்கான புகையிரத சேவை இடம்பெறாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.