IPL தொடரில் மேலும் இரு அணிகளை இணைத்துக்கொள்வது தொடர்பில் அவதானம்..!

IPL தொடரில் மேலும் இரு அணிகளை இணைத்துக்கொள்வது தொடர்பில் அவதானம்..!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ பி எல் தொடரில் மேலும் இரு அணிகளை இணைத்துக்கொள்ள இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபை அவதானம் செலுத்தியுள்ளது.

எனினும் குறித்த விடயம் தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்றைய தினம் இடம்பெறவுள்ள வருடாந்த ஒன்று கூடலின் போதே மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக இரு அணிகள் இணைத்துக்கொள்ளப்படும் போது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.