விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்
அடுத்த வருடம் முதல் விவசாய உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, வெற்றிலை, உள்நாட்டு மா வகை, மரவள்ளி, சீத்தா உள்ளிட்ட உற்பத்திகளின் ஏற்றுமதி அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்காக, குறித்த பயிர்கள் உற்பத்தி செய்யப்படும் விவசாய காணியின் அளவை அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர குறிப்பிட்டுள்ளார்.