“விழிப்புடன் இருங்கள்” பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

“விழிப்புடன் இருங்கள்” பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவது குறித்து பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் 1000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 20, மற்றும் மூன்று சந்தேகநபர்களை பியகம பொலிஸார் நேற்று கைது செய்திருந்தனர்.

சந்தேகநபர்கள் கடுவெல மற்றும் சிலாபத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதன்போது போலி நாணயத்தாள்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் அச்சிடும் இயந்திரமும் கைப்பற்றப்ட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறுகையில்,

“குறிப்பாக இந்த பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள்கள் குறித்து பரிவர்த்தனை செய்வதில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்றார்.