தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட வெல்லம்பிட்டி லக்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பு..!

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட வெல்லம்பிட்டி லக்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பு..!

இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெல்லம்பிட்டி லக்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பு தொகுதி இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை அபயபுரம் கிராமசேவகர் பிரிவும், முருகாபுரி கிராம சேவகர் பிரிவும் இன்று காலைமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.