மறு அறிவித்தல் வரை மூடப்படும் சந்தை - மக்களுக்கு விசேட அறிவிப்பு

மறு அறிவித்தல் வரை மூடப்படும் சந்தை - மக்களுக்கு விசேட அறிவிப்பு

திருகோணமலை - தம்பலகமம் பிரதேச செயலக பிரிவில் முள்ளிப் பொத்தானையில் இடம் பெற்று வரும் வாராந்த சந்தை நாளை(24) இடம்பெறமாட்டாது எனவும் மறு அறிவித்தல் வரை பூட்டப்படவுள்ளதாகவும் தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி தெரிவித்துள்ளார்.

தம்பலகமம் பிரதேச செயலக பிரிவில் கல்மெட்டியாவ பகுதியில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் சுகாதார நடை முறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.