ஆராதனைகளில் 50 பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்..!

ஆராதனைகளில் 50 பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நத்தார் பண்டிகையின் போது தேவாலயங்களில் இடம்பெறும் விசேட ஆராதனைகளில் 50 பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் நேற்று அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.