இனிப்பு மற்றும் சுவையூட்டி சேர்மானங்கள் அடங்கிய உணவுகளை தவிர்க்கவும்..!

இனிப்பு மற்றும் சுவையூட்டி சேர்மானங்கள் அடங்கிய உணவுகளை தவிர்க்கவும்..!

கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது இனிப்பு மற்றும் சுவையூட்டி சேர்மானங்கள் அடங்கிய உணவுகளை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

வைரஸ் நோய்களை தடுப்பதற்காக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.