நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

நாட்டின் பல பகுதிகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தில் கோட்டபொல, மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம மற்றும் கஹவத்தை  ஆகிய பகுதிகளுக்கே மண் சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மத்திய நிலையம் அறிவித்துள்ளது.