கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

2020 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

அனைத்து மாணவர்களும் அடுத்த தரத்திற்கு வகுப்பேற்றப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கான புத்தகங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாணக் கல்வி செயலாளர்கள், மாகாணக் கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2021 ஆம் ஆண்டிற்கான புதிய தவணை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், மேல் மாகாணத்திலுள்ள கொழும்பு , கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளிலுள்ள பாடசாலைகளின் புதிய கல்வித் தவணை அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்குரிய பாடத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாதிருப்பின் , பாடசாலை மட்டத்தில் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு புதிய தவணையின் முதல் இரண்டு மாதங்களும் பாடசாலை மட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.