சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்கு வருகிறது புதிய பிரிவு

சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்கு வருகிறது புதிய பிரிவு

சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவை அமைக்க சிறைச்சாலைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

சிறைச்சாலைகளின் ஆணையாளர் துஷாரா உபுல்தெனிய, சிறப்பு கைதிகளைப் பாதுகாக்கவும், சிறைகளில் கலவரத்தைத் தணிக்கவும் ஒரு சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது எனத் தெரிவித்தார்.

அதன்படி, சிறை புலனாய்வு பிரிவுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறப்பு பிரிவை அமைக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று சிறைச்சாலை ஆணையர் தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான 'பாதுகாப்பான நாடு - சட்டபூர்வமான நாடு' குறித்த பணிக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளை பாதுகாப்பது மற்றும் சிறைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்டுவதைத் தடுக்கும் பணியும் சிறப்பு புலனாய்வு பிரிவுக்குள் அடங்கும்v