வழமைக்கு திரும்பியுள்ள துறைமுக நடவடிக்கைகள்..!
நிலவுகின்ற கொரோனா பரவலுக்கு மத்தியில் அனைத்து சுகாதார விதிமுறைகளுக்கு அமைய கொழும்பு துறைமுகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வழமைப்போன்று இடம்பெற்று வருவதாக இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.
நூற்றுக்கு 95 வீதமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகள் கொழும்பு துறைமுகத்தின் வாயிலாக இடம்பெறுகின்றன.
எனினும் கொரோனா பரவலையடுத்து சில நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் அனைத்து நடவடிக்கைளும் தற்பொழுது வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த அதிகாரசபை அறிவித்துள்ளது.