இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரை பிற்போடுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை - நாமல் ராஜபக்ஷ
பிாித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா தொற்று காரணமாக இலங்கை மற்றும் இங்கிலாந்துஅணிகளுக்கிடையிலான போட்டித் தொடரை பிற்போடுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தொிவித்துள்ளார்.
எமது செய்திப் பிாிவினர் இது தொடர்பில் வினவியபோது, சுகாதாரப் பிாிவு மற்றும் விளையாட்டுத்துறை அதிகாாிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அவர் தொிவித்தார்.
இதேவேளை தற்போது தென்னாபிாிக்க போட்டித் தொடாில் கலந்து கொண்டுள்ள இலங்கை அணியின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிாிக்கட் நிறுவனம் தொிவித்துள்ளது. இதுவரை தென்னாபிாிக்க அதிகாாிகளால் வழங்கப்பட்டுவரும் சுகாதார வசதிகள் தொடர்பில் திருப்தியடைய முடியும் என அவர்கள் தொிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் தென்னாபிாிக்க கிாிக்கட் அணியினருக்கு மேற்கொண்ட மற்றுமொரு பி.சீ.ஆர். பாிசோதனையில் எந்தவொரு கிாிக்கட் வீரருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லையென தென்னாபிாிக்க கிாிக்கட் நிறுவனம் தொிவித்துள்ளது.
இதேவேளை இவ்விரு போட்டித் தொடர்கள் பற்றிய கலந்துரையாடலொன்று கிாிக்கட் அதிகாாிகள் மற்றும் சுகாதாரப் பிரிவுகளுக்கிடையில் நேற்று நடைபெற்றது.
இலங்கை அணியுடன் ஆரம்பமாகவுள்ள போட்டித் தொடருக்காக இங்கிலாந்து கிாிக்கட் அணியினர் எதிர்வரும் ஜனவாி மூன்றாம் திகதி மத்தளை விமான நிலையத்தினுாடாக நாட்டை வந்தடையவுள்ளனர். இவ்வணிகளுக்கிடையிலான முதலாவது போட்டித் தொடர் எதிர்வரும் ஜனவாி 14ம் திகதி, காலி சர்வதேச கிாிக்கட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை தென்னாபிாிக்க அணியுடனான போட்டித் தொடர் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.