மின்சார நிலுவைக் கட்டணங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு!

மின்சார நிலுவைக் கட்டணங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு!

சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உணவகங்களின் மின்சார நிலுவைக் கட்டணங்களுக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் அடுத்த வருட இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இதற்கு முன்னர் இந்நிலுவைக் கட்டணங்களுக்காக 2021ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததோடு அதை தற்போது டிசெம்பர் 31 வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தொிவித்துள்ளது.

குறித்த ஒரு வருட காலத்திற்குள் தவணை முறையில் இந்நிலுவைக் கட்டணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவ்வமைச்சு தொிவிக்கின்றது.