மேலும் 277 பேர் நாடு திரும்பினர்!

மேலும் 277 பேர் நாடு திரும்பினர்!

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

12 விமானங்கள் ஊடாக அவர்கள் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 909 இலங்கையர்கள் 12 விமானங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.