நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரம்...!
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 428 நோயாளர்களும் அதிகமானவர்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
193 பேர் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் நேற்றையதினம் கணிசமான அளவு வீழ்ச்சிப் போக்கை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
கம்பஹா மாவட்டத்தில் 3 நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 42 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 23 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 15 பேரும் பதிவாகியுள்ளனர்.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தலா 11 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 7 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் அiடாளம் காணப்பட்டனர்.
கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 2 பேரும், யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தினால் நேற்று வரையில் 33 ஆயிரத்து 6 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 311 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 376 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 876 பேரும் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, இரண்டாம் அலை தாக்கத்தில் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 27 ஆயிரத்து 563 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு அடுத்தபடியாக, மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டம் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தில் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
கண்டி மாவட்டத்தில் ஆயிரத்து 394 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 691 பேரும், காலி மாவட்டத்தில் 572 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 575 பேரும் பதிவாகியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 561 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 383 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 299 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் 217 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 160 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 155 பேரும் பதிவாகியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 105 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 103 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 96 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 32 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேநேரம், ஏனைய மாவட்டங்களில் 5 ஆயிரத்து 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் இதுவரை 846 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.