ஏழாவது கண்டத்தையும் ஆக்கிரமித்தது கொரோனா

ஏழாவது கண்டத்தையும் ஆக்கிரமித்தது கொரோனா

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றால் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.இந்த நிலையில் அண்டார்டிகாவிலும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எட்டு கண்டங்களில் ஒன்றான அண்டார்டிகாவுக்கு பூர்வகுடி மக்கள் கிடையாது. சாதாரணமாக சுற்றுலாப் பயணிகளும், ஆய்வாளர்களும் அண்டார்டிகாவுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், அண்டார்டிகாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலி நாட்டை சேர்ந்த ஜெனரல் பெர்னார்டோ ஒஹிக்கின்ஸ் ரிகீல்மி ஆய்வு மையம் அண்டார்டிகாவில் இருக்கிறது. இங்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், சிலி இராணுவத்தை சேர்ந்த 26 பேரும், 10 பராமரிப்பு ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 36 பேரும் சிலி நாட்டிற்கு அனுப்பப்பட்டு அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.