நேற்று அதிகளவான தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவு!

நேற்று அதிகளவான தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவு!

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 428 நோயாளர்களில் அதிகமானவர்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

193 பேர் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் நேற்றைய தினம் கணிசமான அளவு வீழ்ச்சிப் போக்கை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

கம்பஹா மாவட்டத்தில் 3 நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 42 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 23 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 15 பேரும் பதிவாகியுள்ளனர்.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தலா 11 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 7 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 2 பேரும், யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.