வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இராணுவத்தளபதி முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் வீடுகளில் தனிமைப்படுத்தல் நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டலுக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு மட்டுமே வீட்டு தனிமைப்படுத்தல் விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஹோட்டலில் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் ஆபத்து இல்லையென்பதால் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
ஆனால், வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் மேலும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது கட்டாயமாகும்.
அரசாங்க தனிமைப்படுத்தப்பட்டல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் பொதுவான இடத்தில் ஒன்றாக வைக்கப்படுவதால் ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவுவதற்கான அபாயம் ஏற்படுகிறது.எனவே அவர்கள் வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.