அமைச்சர் ஜீ எல் பீரிசின் அறிவிப்பிற்கு தொழிற்சார் விரிவுரையாளர்கள் சங்கம் எதிர்ப்பு..!
அபாயமில்லாத பகுதிகளில ;பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விடுத்துள்ள அறிவிப்பில், மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு இல்லாமை குறித்து, தொழிற்சார் விரிவுரையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான ஆசிரியர்களும், பல லட்சக்கணக்கான மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.