சடலங்கை தகனம் செய்வதா நல்லடக்கம் செய்வதா - நியமிக்கப்பட்ட குழு இன்று கூடுகிறது..!

சடலங்கை தகனம் செய்வதா நல்லடக்கம் செய்வதா - நியமிக்கப்பட்ட குழு இன்று கூடுகிறது..!

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சரீரங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இன்று கூடவுள்ளது.

இந்தப் பிரச்சினையை விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த தினம் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் சரீரங்களை பாதுகாப்பதற்காக அதிகுளிரூட்டப்பட்ட ஐந்து கொள்கலன்களை பெற்றுக்கொடுப்பதற்கு சில முஸ்லிம் பிரஜைகள்அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சாரீரங்களை அடக்கம் செய்வதனால், வைரஸ் நிலக்கீழ் நீரில் பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என சிலர் அண்மைய நாட்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

எவ்வாறிருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதால், வைரஸ் தரைக்கீழ் நீரில் பரவக்கூடும் என்பதற்கு இதுவரையில் எவ்விதமான சான்றுகளும் கிடைக்கவில்லை என்று பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு பரவிய சாஸ் வைரஸை அடையாளம் காண்பதற்கும் , அந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றிய இலங்கை விஞ்ஞானி, பேராசிரியர் பீரிஸ் பி.பி.சி செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.