கொழும்பிலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு செல்லவேண்டாம் என கோரிக்கை..!

கொழும்பிலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு செல்லவேண்டாம் என கோரிக்கை..!

மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட பிறப்பு ஆகிய கொண்டாட்டங்களுக்காக மேல் மாகாணத்திலிருந்து மக்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல முயற்சிக்கின்றனர்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், மேல் மாகாணத்திலுமே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

ஆகையினோலேயே இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.