பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக மாற்று முறைமையொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும்..!
பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக மாற்று முறைமையொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் மின்சாரத்துறை அபிவிருத்தி நடவடிக்கை உள்ளிட்ட பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்குரிய விடயங்களின் போது திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை குறித்த சந்தேகம் எழுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் முறைகேடான கொடுக்கல் வாங்கல்களுக்கு இடமளிக்கும் நோக்கில் பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.